New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

Pazhasiraja release postponed to Nov 20!

[Pazhassi+Raja+Trimmed+By+30+Minutes.jpg]
தள்ளிப்போகும் பழசிராஜா

ராஜா என்றாலே சிக்கல்தான் போலிருக்கிறது. இன்று வெளியாவதாக இருந்த பழசிராஜா 20ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது.

பழசிராஜா மலையாளத்தில் எப்போதோ வெளியாகிவிட்டது. மலையாளத்தில் வெளியாகும் அதே நாள் படத்தை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.

சில நடைமுறை சிக்கல்களால் அது நடக்காமல் போய்விட்டது. தமிழ் ரசிகர்களுக்காக மூன்று மணி பதினைந்து நிமிடங்கள் ஓடும் படத்தில் முப்பது நிமிடங்களை எடிட் செய்திருக்கிறார்கள்.

இன்று பழசிராஜா தமிழில் வெளியாவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அறிவித்தபடி இன்று படம் வெளியாகவில்லை. வரும் 20ஆம் தேதிக்கு ‌ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர்.

விளக்கம் கேட்டதற்கு, தமிழகத்தில் மழை பெய்து வருவதால் திரையரங்குக்கு மக்கள் குறைந்த அளவே வருவார்கள், அதனால்தான் இந்த தேதி மாற்றம் என பதில் கிடைத்தது.

தமிழகத்தில் நேற்றே மழை நின்றுவிட்ட விவரம் பாவம், பழசிராஜா டீமுக்கு தெ‌ரியாது போலும்.

No comments:

Post a Comment

 
New Adsensecamp