திருட்டு விசிடியை ஒழிக்க ஒரு துறை உருவாக்கப்பட்டது போல, திருட்டு கதையை ஒழிக்கவும் ஒரு துறையை உருவாக்கினால் பஞ்சாயத்துகள் குறைய வாய்ப்புகள் உண்டு. இல்லையென்றால் நாளரு பிரச்சனையும் பொழுதொரு குடைச்சலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் போலிருக்கிறது. லேட்டஸ்டாக கதை திருட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றி மாறன்.
பொல்லாதவன் என்ற சூப்பர் படத்தை இயக்கிய மனுஷனுக்கும், கதை திருட்டுக்கும் என்ன சம்பந்தம்? கோடம்பாக்கத்தில் விசாரிக்க இறங்கினால் ஏராளமான தகவல்களை கொட்டி தீர்க்கிறார்கள். தற்போது அவர் இயக்கி வரும் ஆடுகளம் என் கதைதான் என்று போர்க்கொடி தூக்குகிறாராம் உதவி இயக்குனர் ஒருவர். கற்றது தமிழ் பட இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இந்த உ.இ.
தான் எழுதிய சேவல் காடு என்ற கதையை பற்றி ராமிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம் இவர். இந்த கதையை அப்படியே வெற்றி மாறனிடம் கூறினாராம் ராம். பிறகென்ன? ஆடுகளம் என்ற தலைப்பில் படப்பிடிப்புக்கே கிளம்பிவிட்டார் தனுஷடன். வேக வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த கதை தன்னுடைய சேவல் காடு கதையின் ஜெராக்ஸ் என்பதை அறிந்தாராம் உ.இ. கதை போன வழியும் தெரிந்துவிட்டது. அவசரம் அவசரமாக இயக்குனர்கள் சங்கத்தில் புகாரும் கொடுத்தாராம்.
வெற்றிமாறனும் இதை ஒப்புக் கொள்ள, கதைக்கு பணமா? அல்லது டைட்டிலில் பெயரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டும்தான் என்கிறாராம் உ.இ. இரண்டு தரப்புக்கும் சேதமில்லாம பிரச்சனையை முடிக்க தீவிரமாயிட்டாங்களாம் கோடம்பாக்கத்தில்!
No comments:
Post a Comment