விவேக் கலந்து கொண்ட விழா - பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்கள்
ஜட்டி பிரா நடிகர் விவேக் கலந்து கொண்ட நல்வரவு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரும்பிய இடமெல்லாம் போலீஸ். பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்பதால் விவேக்கின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம் இது.
அமைதியாக துவங்கியது விழா. விவேக் உள்ளிட்ட அத்தனை பேரையும் மேடையில் ஏற்றியிருந்தார்கள். இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போதுதான் விவேக் விஷயம் மெல்ல தலை து£க்கியது. விவேக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நடுவில் ஒரு விரிசல் விழுந்திருக்கிறது. நாமெல்லாம் சகோதரர்கள். பத்திரிகையாளர்களும் விவேக்கும் உட்கார்ந்து பேச வேண்டும்.
இனிமேல் அவர்களுக்குள் சுமூகமான நிலைமை வர வேண்டும் என்று பேச, சரக்கென்று முன்வரிசையில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி எழுந்தார். "சார்... இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக மட்டும் பேசுங்க. எங்களுக்கும் அவருக்கும் இருக்கிற பிரச்சனையை நாங்க எப்படி எதிர்கொள்வோமோ, அப்படி பார்த்துக்குறோம்" என்று குரல் கொடுக்க அமைதியாக இருக்கையில் அமர்ந்தார் செல்வமணி.
பின்னாலேயே பேச வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் "பேசும்போது, இந்த இசைவிழாவை பற்றி மட்டுமே பேச வேண்டும். நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி பேசி தேவையில்லாத சர்ச்சையை உண்டு பண்ண வேண்டாம்" என்றார் சிறப்பு அழைப்பாளர்களிடம்.
இறுதியாக விவேக் பேச எழுந்தபோது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள். விவேக் என்ன பேசினார் என்பதை இனிமேல் யாரிடமாவது விசாரித்தால் உண்டு.
No comments:
Post a Comment