‘குருதிவலி’ இறுவட்டு- நார்வேயில் வெளியீட்டு நிகழ்ச்சி
காதல் கடிதம், பீஷ்மர், கண்டேன் காதலை, உப்புமூட்டை போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. நார்வேயில் வசிக்கும் வசீகரனும், உதயாவும் இணைந்து ஏராளமான இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். காதல் கடிதம் இசை ஆல்பம் உலக தமிழர்களிடையே மிகவும் பிரபலம். காதல் சொட்ட சொட்ட கவிதைகளும் பாடல்களும் எழுதி வந்த வசீகரன், தான் பிறந்த இலங்கை மண்ணில் நடக்கும் கோர தாண்டவத்தை அனல் பறக்க எழுத துவங்கினார். அந்த கந்தக வரிகளுக்கு மெட்டமைத்து காற்றில் உலவ விட்டார்கள் இருவரும்.
தற்போது உலக தமிழர்களிடையே இவர்களின் இசைத்தொகுப்புக்கு பெரிய வரவேற்பு. இந்நிலையில் ‘குருதி வலி’ என்ற மற்றொரு இசை ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள் இவர்கள். எதிர்வரும் 15 ந் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த இசைத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.
பாடல்களை பிரபல பாடகர்களான மது பாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், நித்ய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இவர்களுடன் உதயாவும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். உயிரை உருக்கும் ஒப்பாரி மெட்டில் அமைந்துள்ள அந்த பாடலின் வரிகளில் சில...
வந்தவனும் போட்டவனும் நல்லாதானே இருக்கான்
என் சனத்தை அழிச்சு முடிச்சவனும் நல்லாதானே இருக்கான்
உளவு சொல்லி திரிஞ்சவனும் நல்லாதானே இருக்கான் -அதை
வேடிக்கை பார்த்து ரசிச்சவனும் நல்லாதானே இருக்கான்...
“என்னதான் தமிழன் புலம் பெயர் தேசங்களில் வசதியாக வாழ்ந்தாலும், அவனுக்கென்று சொந்தமாக ஒரு தேசமில்லையே... இருந்த மண்ணையும் இழந்து முற்று முழுதாக ஒரு அகதியாக வாழ்கிறானே, இந்த அவலத்தை கண் கொண்டு பார்க்கவும் யாருமில்லையே... என்ற எமது நெஞ்சின் வலிகளைதான் இந்த இசைத்தொகுப்பில் பாடலாக வடித்துள்ளேன்” என்கிறார் வசீகரன்.
“வசீகரன் நார்வேயிலிருந்து பாடல்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதை படிச்சிட்டு படுத்த எனக்கு தூக்கமே வரலே. பக்கத்திலே படுத்திருந்த என் பையனின் தலையை கோதிக் கொண்டிருந்தேன். இவனைப்போல 65 ஆயிரம் குழந்தைகள் அநாதைகளாயிட்டாங்க. அவங்களுக்கு தலை கோதிவிட கைகள் இல்லேயே என்று நினைத்தபோது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். அந்த இரவே அவரது வரிகளுக்கு ட்யூன் போட்டு பாடலாக்கினேன்” என்று கூறுகிறார் உதயா.
பாமரன் அழுதால் ஒப்பாரி. படைப்பாளிகள் அழுதால்...? இதுபோன்ற இசையாகதான் வெளிப்படும்!
KURUTHIVALI- New Album
VN Music Dreams proudly presents it's forth Tamizh muisc album KURUTHI VALI will be released on 15.11.2009 in Oslo, Norway.
You are cordially invited to the release of Vaseeharan's forth album
KURUTHIVALI -Pain of Genocide
On Sunday, November 15, 2009 at 5:30 PM
Place: Grorud Samfunnshuset , Kaldbakken.
Music: V.S.Udhayaa
Singers:
Vanan
Balram
Krishnaraj
Abraham.S.P.Keerthan
Madhubalakrishnan
Nthiyashree Mahadevan
V.S.Udhayaa
Lyrics: Vaseeharan
No comments:
Post a Comment