ஹாலிவுட்டுக்கே காப்பி
கரகாட்டக்கரானுக்கே பத்து டூப் ரெடி பண்ணுகிறவர்கள்... ஹாலிவுட் படத்தை விட்டு வைப்பார்களா? வேறொன்றுமில்லை. வரும் 13 ஆம் தேதி ரோலண்ட் எம்மெரிச்சின் மெகா படம் 2012 வெளியாகிறது.
எரிமலை, சுனாமி, நிரநடுக்கம் என சகல இயற்கை சீற்றங்களும் ஒரே சமயத்தில் நடந்து இந்த பூமிப் பந்தே அழிந்து போவதுதான் கதை. கிராஃபிக்ஸில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டியிருக்கிறார்கள். தமிழில் இந்தப் படத்தை ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
2012க்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்த கோடம்பாக்க புத்திசாலிகள் சிலர் 2022 என்ற படத்தை 2012க்கு முன்பே வெளியிட்டுள்ளனர். இதுவும் பேரழிவு பற்றிய படம்தான். கொரிய தயாரிப்பு. விளம்பரம் முதல் புகைப்படம் வரை அனைத்தும் 2012 படத்தைப் போலிருப்பதால் பலரும் ஏமாந்து போயுள்ளனர்.
இந்த திடீர் பினாமியால் கலங்கிப் போனவர்கள் இதுதான் - 2012 - ஒரிஜினல் மற்றதெல்லாம் டூப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அசந்தால் இவர்கள் ஸ்பீல்பெர்க்கிற்கே கிளாஸ் எடுப்பார்கள்.
No comments:
Post a Comment