New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

“31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்” – எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! – Guest Article


நம் தள வாசகர் ரோஷன் எனக்கு ஒரு இ-மெயில் (ஆங்கிலத்தில்) அனுப்பியிருந்தார். அதில் தான் கவிப் பேரரசு வைரமுத்துவை கோவை விமான நிலையத்தில் தற்செயலாக சந்திக்க நேர்ந்ததாகவும் எந்திரன் ஆடியோ குறித்து சில சூப்பர் தகவல்களை பெற்றதாகவும் கூறியிருக்கிறார். கவிப்பேரரசுவுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

நன்றி ராகேஷ் அவர்களே. தாங்கள் நேற்று இருந்த ஃபீலிங்கை தங்கள் எழுத்துக்களை வைத்தே என்னால் உணர முடிகிறது. உங்கள் உற்சாகம் எனக்கும் தொற்றி, நான் ஏதோ வைரமுத்துவை பார்த்தது போல எனக்கு ஒரு உணர்வு.

தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

- சுந்தர்

simplesundar@gmail.com
+91-9840169215

————————————————————————-
அவரது மெயிலை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்:

கோவை விமான நிலையத்தில் கவியரசு வைரமுத்துவுடன் ஒரு ஜாலி சந்திப்பு – நம் வாசகர் ராகேஷ் ரோஷன்

ஹை சுந்தர்,

தலைவரை பற்றிய செய்திகளை ஆவலுடன் திக்குகள் எட்டும் தேடி பார்த்து படித்து ஆனந்தப்படும் தீவிர ரசிகன் நான். கடந்த 4 – 5 ஆண்டுகளாக உங்கள் தளத்தின் ரெகுலர் விசிட்டர். Blogspot காலத்திலிருந்தே நம் தளத்திற்கு ரெகுலராக வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே நான் நம் தளத்தில் நிறைய கமெண்ட்டுகளை அளித்திருக்கிறேன். உங்களுக்கு மெயில் அனுப்புவது இது தான் முதல் முறை.

என்னைப் பொறுத்தவரை “நான் தலைவரின் ரசிகன்” என்று யாராவது சொன்னால் அவர்களை உடனடியாக நான் விரும்ப ஆரம்பித்துவிடுவேன். நட்பு பாராட்டுவேன். அவர்கள் மீது எனக்கு ‘SOFT CORNER’ வந்துவிடும். (இது தான் நம்ம ரசிகர்களோட ஸ்பெஷாலிட்டி!). உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் செய்திகளை கையாளும் விதம் அதை எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதம் அருமை. அதுவும் தலைவரின் இக்கட்டான தருணங்களில் நம் ரசிகர்களை மனம் தளராது உற்சாகமாக வைத்திருந்ததில் உங்கள் பங்கு அபாரமானது. (எல்லாம் இறைவன் செயல்!).

நம் தளத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் பீரிட்டு கிளம்பும். நம் ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் அளிக்கும் கமெண்ட்டுகளை படிக்கும்போதெல்லாம் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். (நிச்சயமாக!)

சரி நான் விஷயத்துக்கு வருகிறேன். நேற்று மாலை (வியாழன்) கோவை கே.ஜி. திரையரங்கிற்கு மதராசப்பட்டினம் படம் பார்க்க சென்றிருந்தேன். படத்தின் நாயகி ஆமி ஜாக்சனும் இதர படக் குழுவினரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கே.ஜி. திரையரங்கம் வந்திருந்தார்கள். நானும் என் நண்பனும் ஆமியை பார்ப்பதற்காகவே சென்றிருந்தோம். ஹி !! ஹி!! (அட நம்ம க்ரூப்!). தியேட்டரில் ஆமியை பார்த்தபோதும் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவரை எப்படியும் சென்னை திரும்புகையில் விமான நிலையத்தில் சந்தித்துவிடவேண்டும், அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது எடுத்துவிட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து, கோவை விமான நிலையத்திற்கு சென்று விட்டோம். அங்கு ஆமிக்காக காத்திருந்தோம். 8.30 க்கு சென்னை செல்லும் விமானம் தயாராக இருந்தது. ஆனால் ஆமியை பார்க்கமுடியவில்லை. எங்கள் யோசனை backfire ஆகியது.
Rakesh Roshan VairamuthuJ 640x418 “31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்” – எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! – Guest Article

மயிலுக்காக காத்திருக்கும்போது மான் வந்ததுபோல ஒரு சம்பவம் அப்போது நடைபெற்றது. ஏர்போர்ட் நுழைவு வாயிலில் காத்திருந்தபோது ஒரு இன்னோவா கார் வந்தது. ஒருவேளை ஆமியாக இருக்கப்போகிறது என்று காருக்குள் பார்த்தால், அட நம்ம கவியரசு வைரமுத்து. நான் தான் அவரை முதலில் பார்த்தேன்.

“மச்சான்… வைரமுத்து வந்திருக்கார்டா…” என்று கத்திக்கொண்டே நண்பனை நோக்கி ஓடினேன். நான் கத்தியது மற்றவர்கள் காதிலும் விழுந்துவிட்டதால், உடனே அனைவரும் காரை நோக்கி சென்றுவிட்டோம். வைரமுத்து காரை விட்டு இறங்கும்போது, அவருக்கு எதிரில் அருகே, முதல் ஆளாக நான் தான் நின்றுகொண்டிருந்தேன்.

அவரை பார்த்து நான் சொன்ன முதல் வார்த்தை “வணக்கம் சார்” என்பது தான். (வைரமுத்துவை பார்த்தா தமிழ தானா வருது!)

பதிலுக்கு அவர் “வணக்கம்” என்று கூற, எனக்கு உற்சாகம் பீறிட்டு கிளம்பியது.

உடனே நான், “சார் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டேன். பதிலுக்கு அவர், “நல்லாருக்கேன் பா” என்றார்.

அடுத்து நான் கேட்ட கேள்வி, “எந்திரன் பாடல்கள் எப்படி வந்திருக்கு சார்?” என்பது தான்.

அதற்க்கு அவர் அளித்த பதில், “பிரமாதமா வந்திருக்கு” என்பது தான். உடனே அவர சொன்னார், “31 ஆம் தேதி மலேசியாவில் ஆடியோ வெளியீடு!”

என்னால் என் கண்களை நம்பமுடியவில்லை. நடப்பதெல்லாம் கனவா நினைவா…. ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

“சார்… நிஜமாவே 31 ஆம் தேதியே ஆடியோ ரிலீஸ் ஆயிடுமா?”

“ஆமாம்பா… 31 ஆம் தேதியிலிருந்தே நீங்க பாடல்களை கேட்கலாம்” என்றார் கவியரசு. ஒரு நிமிடம் எனக்கு மூச்சே நின்றுவிட்டது. வைரமுத்து சாருக்கு இப்படின்னா… ஒரு வேளை நான் தலைவரை மட்டும் இப்படி பார்த்து பேசியிருந்தேன்னா… நான் மயக்கம் போட்டே விழுந்திருப்பேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் இது சுந்தர்.

பிறகு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். நானும் என் நண்பனும் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். நேற்றைக்கு பூரா நான் வானத்துல மிதந்த மாதிரி ஃபீல் பண்ணினேன் சுந்தர். இதை உடனடியாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். மாலை தான் என் லேப்டாப் கிடைச்சது. இத்துடன் வைரமுத்து சாருடன் நாங்கள் எடுத்த புகைப்படத்தை இணைத்திருக்கிறேன்.

பிரதிபலன் எதிர்பார்க்காது நீங்கள் செய்யும் இந்த பணியை இப்படியே சீரும் சிறப்புமா தொடரவேண்டும் சுந்தர். உங்களால் நிறைய பேர் சந்தோஷமா இருக்கோம்.

வாழ்க தலைவர். வளர்க தமிழ் மக்கள்.

- Raakesh Roshan
roshan6464@gmail.com

————————————————————————-

Rakesh Roshan’s orginal mail:

Hi,
Sundar, i’m a die hard fan of thalaivar.I will catch all the bits and pieces of his news from all the possible resources.For the past 4-5 years i’m frequent visitor to your website……right from your blogspot days.I have given many comments in the past,but this is the first time i’m sending u a mail…..In my day to day life, if any one says they r a fan of thalaivar, i’ll start liking them and will have some soft corner for them. But for u i have become a great fan of you…the way u interpret things about the various happenings of our thalaivar during the hard times where our thalaivar’s fans were in a confused frustrated way, is really mind blowing. I feel like i’m in a family when i see our website and the regular people who r posting the comments. i can say confidently that only a thalaivar fan will feel this way…i think u also will agree on this….
Ok sundar i’ll come to the subject. Yesterday evening i went to KG theatre in coimbatore to watch madraspattinam film where amy jackson and other film crew came for the promotion. I and my friend went there mainly to see Amy Jackson(he he he). After seeing her in the theatre also we didn’t get satisfied, so we came out of the theatre and went straightaway to the airport with the idea of taking a snap along with her.There was 8.30 flight to chennai. We waited for her but our idea backfired.
I was sitting near the entrance waiting for their car, by 8.25 pm i saw an innova coming near the entrance and i can’t beleve my eyes what i’m seeing,i saw vairamuthu inside…i was the only one who saw him and i told my friend ‘machan vairamuthu da’ and i ran to the car.After that people around the entrance came after seeing us. The moment he opened the car i was the one who was standing close to him.
After seeing him the first thing
i said was “vanakkam sir”(avara patha vudane thamil thaana varuthu)…

he also told me “vanakkam vanakkam”.

then i asked “sir eppidi irukeenga”..

he told “nalla irukken pa”…

then immediately i asked him “sir ENDHIRAN songs eppidi vanthirukku”…..

he told me “pramathama vanthirukku”….

then he itself told “31 aam thethi malaysiavula audio release”….

i can’t belieave my ears, then i asked him without belief..“sir nejamaavae 31st release ayiruma”…

he told “31aam thethiyil irunthu neenga paata kaekalaam”……i can’t able to breathe for a minute(vairamuthu vukke ippidinna thalaivara mattum naan pathirunthaenna naan mayangiyae vilunthiruppaen)…this was a great experience for me in my life sundar….

then i got the autograph form him and my friend and i took photos with him…..naan nenachu kooda paakala ippidi oru vaaippu kidaikkumnu….nethu poora naan vanathula mithanthutu irunthaen….i wanted to share this with u sundar, so only i’m sending my experience….morning eh ungalukku mail pannanumnu ninaichen….but ippo thaan ennoda laptop kidaichathu…..i had also attached the photo…
Unga works ah ippidiye serum sirappuma continue pannunga….unga naala neraiya per santhosama irukkanga….i don’t have words to appreciate u sundar for ur remarkable work without looking for any results….i will always be in suport for u sundar…..“Vaazhga Thalaivar, Valarga Thamil Makkal”
R O S H AN

No comments:

Post a Comment

 
New Adsensecamp