எந்திரன் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. தயாரிப்பு தரப்பை தவிர அனைவரும் செய்திகள் மற்றும் படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆடியோ வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் சூழலில் இப்படி விளம்பரங்கள் எதுவும் செய்யாமலிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை வெகுவாக தோற்றுவித்துள்ளது.
ஆடியோ வெளியீடு நடக்கும் இடம் பற்றியோ கலந்துகொள்வோர் விபரம் பற்றியோ இதுவரை இங்கு யாரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி நடைபெறும் மலேசியாவில் மட்டும் ஏக் தம்மில் விளம்பரங்கள், எப்.எம்.வானொலி அறிவிப்புக்கள் என அனைத்தும் தூள் பறக்கின்றன.
ஏற்கனவே, மலேசியாவில் எந்திரன் ஜூரம் பரவ ஆரம்பித்துவிட்டது. சுமார் 3000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று லட்சகணக்கான ரசிகர்கள் துடிக்கின்றனர்.
இதனிடையே எந்திரன் இசை வெளியீட்டில் – படத்தில் பாடல்களை பாடியுள்ள பாடகர்களில் ஆறு பேர், மேடையில் தோன்றி பாடல்களை பாடவிருக்கின்றனர். ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் கண் கவர் கலைநிகழ்ச்சிகளும் உண்டு. சிம்பு மேடையில் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.
இதனிடையே எந்திரன் ஆடியோ வெளியீட்டுக்காக தமிழக முதல்வர் கலைஞரின் வாழ்த்து செய்தி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் டி.வி. அலுவலக ஸ்டூடியோவுக்கு அரிதாகவே வரும் தமிழக முதல்வர், சூப்பர் ஸ்டாரை வாழ்த்துவதற்க்காக நேற்று முன்தினம் வந்திருந்தார். பதிவு செய்யப்பட்ட வாழ்த்து செய்தி, மலேசியாவில் நடைபெறும் இசை வெளியீட்டின்போது ஒளிபரப்படும்.
ரசிகர்கள் அனைவருக்கும் தற்போது இருக்கும் ஒரே கேள்வி…. சூப்பர் ஸ்டார் மேடையில் ஏதாவது PERFORMANCE செய்வாரா என்பது தான். அவர் கடைசியாக மேடையில் PERFORMANCE செய்தது, இதே மலேசிய மண்ணில் தான். (1995 ஆம் ஆண்டு). ஆட்டோக்காரன் பாடலுக்கு அவர் ஆடியது மறக்க முடியாதது. 1995 ஆம் ஆண்டு GEC Tv (Golden Eagle Communications – அதாவது பழைய விஜய் டி.வி.) தொலைகாட்சியில் சூப்பர் ஸ்டாரின் மலேசிய கலைவிழா தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அதை காண்பித்தார்கள். அதற்க்கு பிறகு சூப்பர் ஸ்டார் பல மேடைகளில் தோன்றியிருந்தாலும் எந்த மேடையிலும் ஆடவில்லை. (ரமண மகரிஷி பற்றி சூப்பர் ஸ்டார் பேசியதும் இங்கு தான்!).
சூப்பர் ஸ்டார் மலேசியாவில் மீண்டும் மேடையில் ஆடவேண்டும்; அதை கண்டு நாம் ரசிக்க வேண்டும்.
மலேசியாவை பொறுத்தவரை, எந்திரன் ஆடியோ வெளியீடு தங்கள் நாட்டில் நடப்பதை அம்மக்கள் மிகப் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். மலேசிய பத்திரிக்கைகளும் இதை பிரதிபலித்து வருகின்றன.
நண்பர் பி.ஆனந்த மலேசியாவிலிருந்து நமக்கு அனுப்பியிருக்கும் பேப்பர் கட்டிங்கே இதற்க்கு சாட்சி. தமிழ் நேசன் என்ற அந்த பத்திரிகை ஆடியோ வெளியீடு குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியை பாருங்கள்.
எந்திரன் – சில மினி செய்திகள்:
* அடுத்து – இதே போன்று ‘விரைவில்’, ‘நாளை முதல்’, ‘இன்று முதல்’ போன்ற வாசகங்களை தாங்கி விளம்பரங்கள் வரவிருக்கின்றன.
* எந்திரனுக்கென OFFICIAL SITE தயாராகிக்கொண்டிருக்கிறது. http://www.enthiranthemovie.in என்பது தான் அதன் முகவரி.
* எந்திரன் ஆங்கிலத்தில் இனி ENTHIRAN என்று தான் அழைக்கப்படவேண்டும். இது குறித்து ரசிகரின் ஆலோசனையை (PRONOLOGY) ஷங்கர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். எந்திரனின் ப்ரோமோவில் எல்லாம் ENTHIRAN என்று தான் காணப்படுகிறது. ஷங்கருக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை உண்டா அல்ல இது தற்செயலா என்று தெரியவில்லை. எப்படியோ நன்றி ஷங்கர் சார்!
* ஆடியோ சி.டி.யின். ரேப்பரில் ‘எந்திரன்’ படம் 3D யில் emboss செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. (Spot UV & Lamination).
* அடுத்தடுத்து மூன்று விதமான போஸ்டர்கள்/ஸ்டில்கள் வரவிருக்கின்றன.
Stay tuned for more updates…
———————————————————————-
OnlySuperstar.com in twitter
Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.
Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.
———————————————————————-
OnlySuperstar.com in facebook
Join us with facebook @
http://www.facebook.com/thalaivarfans
———————————————————————-
thanks for your continuous support.
———————————————————————-
Translation
by Dr.Suneel
endhiran- scoop 10- endhiran audio launch events and innovative wrapper for audios
enthiran mania has began with release of various infos from various sources except the official confirmatory news from the production company.fans are little tensed and unrest as the sun pics is maintaining silence as we just have a few days before audio launch.in malaysia – where the audio launch is scheduled all promotional activities are in full fledge with adds in magazines,newspapers and f.m stations.
already malaysian fans are gripped with enthiran fever , lakhs and lakhs of fans are trying desperately to seek an entrance in the mega event where only 3000 persons can be seated. meanwhile it is also planned that during the launch ,six singers who sung the song in enthiran will be perfoming live along with a gala of cultural fest, including simbu’s perfomance. dr.kalaignar , the cm of tamilnadu,who rarely visits the tv station, recently came to kalaignar tv office to record a special message on the eve of audio launch of enthiran to the enthiran crew.this will be telecasted during audio launch at malaysia.the fan’s expectations are high ,especially there is a lingering unanswered question , whether thalaivar will perform live in the show.it has been a wile since he did it, hope you all remember his last stage perfomance in the same malaysia in 1995 for autokaran song of baasha which was telecasted by golden eagle communications tv- old vijay tv ,the famous speech about ramana maharishi is also on the same tour, even though he attended several programs later he never gave any performance.fans are eagerly awaiting.our friend mr.B,Anand from malaysia has sent a paper cutting from a malysian tamil daily tamil nesan which gives us the idea how delightful and happy malysian fans and media for enthiran’s audio launch.
1.similar to the posters we had now – hereafter adds with superb stills with various tags like from tomorrow. from today etc are planned to be released periodically.
2.http://www.enthiranthemovie.in- is the official site for the movie, which is going to be launched shortly in full swing
3.seems shankar has given consent to an advice given by a fan in comments section ,changing the name from ENDHIRAN to ENTHIRAN, in lines with pronology.we are not sure whether shankar believe’s in these things or just a casual change. as this name only appears in all promos now.
4.3d embossed stills are used in the wrappers of the audio cd’s (Spot UV & Lamination)
5. 3 more varieties of stills are to be released soon.wait for more updates.
[END]
No comments:
Post a Comment