"ஹேய்ய்ய்யேய்ய்ய்... யேய்ய்ய்ய்ய்... ஹேய்ய்ய்!" என்று அதட்டல் வசீகரத்துடன் அதிரடித்து
'you wanna come and get it boy... Oh are you just a robo toy! you be my man's back up... i think you need a check up... காதல் செய்யும் ரோபோ... நீ தேவை இல்லை போ போ!' என்று 'ரோபோ' ரஜினியுடன் மெட்டாலிக் கவர்ச்சியுடன் டூயட் பாடியவர்கள் லேடி காஷ் அண்ட் க்ரிஸ்ஸி.
'எந்திரன்' படத்தின் ரோபோ சாய்ஸ் பாடலான 'இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ' பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானோடு குரல் கொடுத்திருக்கும் இவர் கள்தான் அந்தப் பாடலின் ஆங்கில வரிகளை எழுதியவர்கள். சிங்கப்பூர் தமிழர்கள். இசை வசமான தோழிகள். சென்னையில் இருவரும் படித்துக்கொண்டு இருப்பது ஆடியோ இன்ஜினீயரிங்.
"நீங்க யார்... எப்படிக் கிடைச்சது 'எந்திரன்' வாய்ப்பு?"
"சிங்கப்பூர் தமிழ்ப் பெண்கள் நாங்க. சோஷியல் நெட்வொர்க்கிங் சைட் மூலமா நாலு வருஷம் முன்னாடி ரெண்டு பேரும் ஃப்ரெண்ட் ஆனோம். எங்க நிஜப் பேர். கலை, சாரதா. ஆனா, ஸ்டைலுக்காக லேடி காஷ், க்ரிஸ்ஸின்னு மாத்திக்கிட்டோம். நாங்க பாடின பாடல்களை யு டியூப்பில் அப்லோட் பண்ணி இருந்தோம். அதைக் கேட்டுட்டு 'காதல்' பட இசை அமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் கூப்பிட்டார். ஒரு கன்னடப் படத்தில் பாட வாய்ப்பு தந்தார். ஆனா, அந்தப் படம் ரிலீஸே ஆகலை. சரி, அப்படியே லாக் ஆகிடக் கூடாதுன்னு எல்லா ஸ்டுடியோவிலும் எங்க சவுண்ட் டிராக் கொடுத்துட்டு வந்தோம். ஒருநாள் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்டுடியோவில் இருந்து அழைப்பு. பயந்துட்டே போய் நின்னோம்!" என்று காஷ் நிறுத்த... தொடர்கிறார் க்ரிஸ்ஸி... " 'ஒரு பாட்டுல நீங்களும் பாடணும். நீங்க சந்தோஷமா இருந்தா, என்ன ஹம் பண்ணுவீங்களோ, உற்சாகமா இருந்தா என்ன மூட் இருக்குமோ அப்படியே இருங்க'ன்னு மட்டும் சொல்லி, பாடச் சொன்னார் ரஹ்மான் சார். பாடி முடிச்சதும், 'குட்'னு மட்டும் சொன்னார். அப்படியே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாட்டுலயும் வாய்ப்பு தந்தார். 'செம்மொழியான தமிழ் மொழியாம்'னு ஹை பீட்ல வர்ற குரல் எங்களோடதுதான். தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'கொமரம்புலி' படத்தில் ரஹ்மான் சார் மியூஸிக்ல ஒரு பாட்டு பாடுறோம்!" என்று முடிக்கிறார் கிரிஸ்ஸி.
"அடுத்து என்ன?"
"எங்க ஆல்பம் வேலைகளை ஆரம்பிச்சுட்டோம். அடுத்த வருஷம் ரிலீஸ். ஆல்பத்தின் பேர் 'ட்ரீம்ஸ்'! ஆமாம்... எங்க கனவுகள்!"- கண்கள் மின்னச் சிரிக்கிறார்கள் தோழிகள்
Good Luck girls !
No comments:
Post a Comment