New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

எந்திரன் பட திருட்டு டிவிடி... விற்றவருக்கு ரசிகர்கள் [^] அடி-உதை!

எந்திரன் படத்தின் திருட்டு டிவிடி விற்பனை செய்தவரைக் கண்டுபிடித்து ரஜினி ரசிகர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம், வெளியான மூன்றாவது நாளே அதன் திருட்டு டிவிடி மதுரையை அடுத்த மேலூர் பஸ் நிலையம் அருகே ஒரு வணிக வளாகத்தில் விற்கப்படுவது தெரியவந்தது.

உடனே ரசிகர்கள் அவற்றை பறிமுதல் செய்து, சி.டி. விற்ற நிஜாமை (37) பிடித்து போலீசில் ஒப்படைப்பதற்காக போலீஸ் [^] நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து விட்டனர். எந்திரன் படத்தின் திருட்டு டிவிடியை விற்றதாக பிடிபட்ட நிஜாமை, ஆத்திரத்தில் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

போலீசார் விசாரணை [^] நடத்தி திருட்டு சி.டி. விற்ற நிஜாமை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

எந்திரன் திருட்டு டிவிடி விற்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க தனிப் படை ஒன்றையும் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
New Adsensecamp