நாம் நேற்றே சொன்னபடி, ஒட்டுமொத்த மீடியாவின் பாராட்டுக்களை குவித்து வருகிறது எந்திரன். ரசிகர்கள் திரும்ப திரும்ப படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிக்கட்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தியேட்டர் ஓனர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வி.ஐ.பி.க்கள் பிரஷருக்கு பயந்து செல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ரோபோ டிக்கட் நச்சரிப்பு மழையில் நனைந்துகொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அவர்களிடம் தங்களை நிரூபிக்க டிக்கட்டுக்கு அலைந்தால் இறுதியில் கிடைப்பது ஏமாற்றமே. ஆனால் அதுவும் சந்தோஷமே!
நேற்றைக்கு மட்டும் இருமுறை தலைவர் புண்ணியத்தில் நமக்கு தொலைக்காட்சியில் (NDTV-Hindu & IBN Live பிரத்யேக ஸ்டூடியோ கவரேஜ்) தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. நேரடி ஒளிபரப்பில் அவர்கள் ஸ்டூயோவிலேயே எந்திரனை பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாப் புகழும் தலைவருக்கே.
Click the image to Zoom
நம்மை பொறுத்தவரை இந்த இரண்டு நாளில் இதுவரை ஐந்து முறை படத்தை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல ஒரு freshness. ரிலீஸ் டயத்து உற்சாகத்துக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது. எனவே, நம் தளத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை இவற்றிற்காக ஒதுக்கிவிட்டேன். இதோ இன்று இரவு மறுபடியும் கொளத்தூர் கங்காவிற்கு செல்கிறேன். (நான் வில்லிவாக்கத்தில் ப்ளஸ் டூ படிக்கும்போது, கிளாஸ்மேட்களுடன் இங்கு தான் படம் பார்க்கவருவேன்!) சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் விடாமல் அனைத்து தியேட்டர்களிலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படம் பார்த்துவிட உத்தேசம்.
நிலைமை இப்படியிருக்க, ஊடங்கள் படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. அதன் தனித்துவத்தை உணர்ந்து. (ஒன்று விடாது அனைத்தையும் cover செய்கிறேன். பொறுமை!)
ஒரு சாம்பிளுக்கு இன்றைய ஹிந்துவில் முதல் பக்கத்தில் வந்திருக்கும் இந்த செய்தியை பாருங்கள். ஹிந்துவில் சினிமா செய்திகள் முதல் பக்கத்தில் வருவது தலைவருக்கு மட்டுமே.
No comments:
Post a Comment