New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

எந்திரன் படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் ஐடியா இல்லை-ரஜினி

எந்திரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் ஐடியா இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் [^].

எந்திரன் என்ற பெயரில் தமிழிலும், ரோபோ என்ற பெயரில் இந்தி, தெலுங்கிலும் உருவாகி வெளியாகியுள்ள எந்திரன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாலிவுட் [^] பிரபலங்களுக்காக ரோபோ இன்று திரையிடப்படவுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் மும்பை [^] வந்துள்ளார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரோபோ வெற்றி குறித்து கேட்டபோது மிகப் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் வெற்றியை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன் என்றார் ரஜினி.

ரோபோவின் தொடர்ச்சி எடுக்கப்படுமா, அதில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அப்படி ஒரு ஐடியா இதுவரை இல்லை என்றார் ரஜினி.

No comments:

Post a Comment

 
New Adsensecamp