New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார்! உலகமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்!!

ண்பர்களே, இன்று (Oct 1) அதிகாலை 2.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய நான் இரு முறை என் நண்பர்கள் பட்டாளத்துடன் படத்தை பார்த்துவிட்டு, (ராக்கி, தேவி) மாலை 5.00 மணிக்கு தான் வீடு திரும்பியுள்ளேன்.

IMG 4798 640x480  சொல்லி அடித்த சூப்பர்  ஸ்டார்! உலகமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்!!

@ Ambattur Rakki 3.30. a.m Oct 1st

தியேட்டர்களில் நடக்கும் திருவிழாகோலத்தை கண்டு ரசிக்க மறுபடியும் இப்போது கிளம்பிவிடுவேன் என்பதால் என் விமர்சனத்தை நாளை சொல்கிறேன்.

அதற்க்கு முன்பு: படத்தை பற்றி நம் கருத்துக்கள்…

இது படம் அல்ல… பட்டாசு!

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் உற்ச்சாகத்தை அளவிட வார்த்தைகள் இல்லை. இப்படியெல்லாம் நாம் ஒரு ரஜினி படம் பார்ப்போம் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்ததுண்டா?

பொதுவாக பண்டிகை நாளன்று படங்கள் ரிலீசாகும். ஆனால் பட ரிலீசே பண்டிகையாவது தலைவருக்கு மட்டும்தான்.

IMG 4799 640x480  சொல்லி அடித்த சூப்பர்  ஸ்டார்! உலகமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்!!

@ Ambattur Rakki 3.30 a.m

எந்த காட்சியை விவரிக்க? சிட்டி செய்யும் குறும்புகளையா? இல்லை, அதன் வில்லத்தனத்தையா? இல்லை இறுதியில் வரும் கிராபிக்ஸ் பிரமாண்டத்தையா? இல்லை பாடல்களில் சூப்பர் ஸ்டாரின் அழகையா? எதை சொல்ல?

இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை. இனியும் வரப்போவதில்லை.

ஊடகங்களை பொறுத்தவரை, East, West, North, South என எல்லா திக்குகளிலும் எந்திரனை கொண்டாடுகிறார்கள் – அதன் அருமையை புரிந்து!

IMG 4800 640x480  சொல்லி அடித்த சூப்பர்  ஸ்டார்! உலகமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்!!

@ Rakki 3.45 a.m. - Palabishekam to thalivar

எனக்கு தெரிந்து, சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு இப்படி ஒரு UNIFORM POSITIVE REVIEWS வந்ததில்லை.

உதாரணத்துக்கு ஒன்று: “As the country overdoses on Rajini fever, miss it at your own risk!”

ஆக்க்ஷன், ஸ்டைல், காமெடி, அதிரடி, கிராபிக்ஸ் என பட்டையை கிளப்பும் கிளப்புகிறது இந்தப்படம். டிபிகல் ரஜினி படம் என்றால் அது இது தான்.

IMG 4806 640x480  சொல்லி அடித்த சூப்பர்  ஸ்டார்! உலகமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்!!

தியேட்டருக்குள்ளே...

காயத்ரி, மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே ஆகிய படங்களின் வில்லன்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு காரெக்டராக உருவாக்கி, அதற்க்கு மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் மிடுக்கை கொடுத்திருக்கிறார் ஷங்கர் இந்த படத்தில் வில்லனாக கலக்கும் சிட்டிக்கு. இடைவேளைக்கு பிறகு வரும் வில்லன் சிட்டியின் வார்த்தைகள், ஏன் பார்வைகள் கூட பன்ச் தானே?

என்ன முதல் தடவை பார்த்தவங்க ரெண்டாவது முறை பார்க்க போறீங்களாக்கும்? டிக்கட் கிடைச்சாத்தானே?

(நான் ரெண்டு தடவை பார்த்துட்டேன். மறுபடியும் நாளைக்கு டிக்கட்டுக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். என்ன நம்ம கூட முதல் ரெண்டு muraiyum படம் பார்த்த அத்தனை பேரும் வருவேன்னு அடம் பிடிக்கிறாங்க. என்னங்க செய்ய?)

Note: நாம விடியற்காலை ‘ராக்கி’லயும், பிறகு 8 A.M. மணிக்கு ‘தேவி’லயும் நம்ம நண்பர்களோட பார்த்த கதை & விழுந்து விழுந்து screenla தலைவரை கும்பிட்ட கதை, நம்ம நண்பர்கள் கூட சேர்ந்து ஆடி பாடி அமர்க்களம் பண்ண கதை… எல்லாம் வருது.. வெயிட் பண்ணுங்க… (Brindha ticktets was given to my another group of higher sec. school friends!)

No comments:

Post a Comment

 
New Adsensecamp