New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

பிரிட்டனில் எந்திரன் முதல் நாள் வசூல் ரூ 35.32 லட்சம்.. இந்திப் படத்தை முந்தியது!

பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன்.

இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் [^] அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.

பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதாக பிரபல இணையதளம் தெரிவித்துள்ளது. இன்னும் சனி, ஞாயிறு ஆகிய இரு வார இறுதி நாட்களின் விவரங்கள் வெளிவரவில்லை.

இதனை பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷும் உறுதிப்படுத்தியுள்ள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பிரிட்டிஷ் பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் நிச்சயம் எந்திரன் இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. அஞ்ஜானா அஞ்ஜானியை விட குறைந்த திரையரங்குகளில் வெளியாகியும், அதிக வசூல் பெற்றுள்ளது ரஜினியின் எந்திரன். திங்கள் இரவு எந்திரனுக்கு என்ன இடம் என்பது தெரிந்துவிடும்" என்றார்.

No comments:

Post a Comment

 
New Adsensecamp