New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

ஐஸ்வர்யாவின் புது அக்கா!


எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அக்காவாக வருகிறாராம் டிவி நடிகை [^] தேவதர்ஷினி.

டிவியிலும், சினிமாவிலும் ஒரே சமயத்தில் பிசியாக இருப்பது வெகு சிலர்தான். அந்த வகையில் தேவதர்ஷினி இந்த இரண்டிலும் சம அளவில் கால் பதித்து செம பிசியாக இருப்பவர்.

டிவி நடிகையாக அறியப்பட்ட இவர் காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். பார்த்திபன் கனவு படத்தில் விவேக்குடன் சேர்ந்து கலக்கல் காமடி செய்து சிறந்த காமடியென் விருதும் பெற்றவர்.

இவர் இப்போது சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். காரணம் எந்திரன் படத்தில் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனும் நடித்ததால் வந்த பெருமிதம் அது.

இப்படத்தில் ஐஸ்வர்யாவின் அக்கா வேடத்தில் வருகிறாராம் தேவதர்ஷினி. சிறிய வேடம்தான் என்றாலும் சொல்லும்படி இருக்கும் என்கிறார் புன்னகையுடன்.

ஐஸ்வர்யா குறித்து அவர் கூறுகையில், அய்யோ, அழகின்னா உண்மையிலேயே அவர்தான். உலக அழகிப் போட்டிக்கு முழுக்க முழுக்க தகுதியானவராக இன்னும் இருக்கிறார் அவர். அவரது பேச்சு, ஸ்டைல், அழகு எல்லாமே அசத்தலாக இருக்கிறது. அவருடன் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது என்கிறார் ஆண்களுக்கு இணையான புளகாங்கிதத்துடன்.

அதேபோல ரஜினியுடன் நடித்ததும் மிகப் பெருமையாக இருக்கிறதாம். ஷங்கர் சார் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. எந்திரனில் நடிக்க வேண்டும் என்று கேட்டு, உடனே ஓகே சொல்லி விட்டேன் என்கிறார் தேவதர்ஷினி.

தேவதர்ஷினிக்கு ஒரே ஒரு பெரிய ஆசைதானாம், அது தமிழ் [^] சினிமாவில் முழு நீள காமெடியனாக மாற வேண்டும் என்பது. ஆனாலும், டீசன்ட்டான காமெடியில் மட்டுமே நடிப்பது என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லையாம்.

தற்போது காஞ்சனா படத்தில் கோவை [^] சரளாவுடன் இணைந்து செமத்தியான காமெடியில் கலக்கியுள்ளாராம் தர்ஷினி.

No comments:

Post a Comment

 
New Adsensecamp