
எந்திரன் படம் வெளியாவதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலைக்குச் செல்கிறார்.
ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை இப்போதே துவங்கிவிட்டது. உலகமெங்கும் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்தியப் படம் ஒன்று, குறிப்பாக தமிழ்ப் படத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் மற்றும் வர்த்தக அங்கீகாரம் பலரையும் விழிவிரிய வைத்துள்ளது.
இந்தப்படத்தின் இறுதி கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நேற்று முடிவுக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் ஏ ஆர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
அனைத்தும் முடிந்ததும், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் ரஜினிக்கு எந்திரனின் முதல் பிரதியை போட்டுக் காட்டுகின்றனர். படத்தைப் பார்த்த கையோடு இமயமலைக்குச் செல்லும் ரஜினி, ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார்.
இம்முறை பாபாவின் குகைக்குச் செல்லும் ரஜினி, அங்கிருந்து மானசரோவர் பகுதிக்கும் செல்கிறார். அவருடன் நெருங்கிய நண்பர்கள் குழுவும் செல்கிறது.
No comments:
Post a Comment