New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

செளந்தர்யா-அஸ்வின் திருமணம் பிரபலங்கள் வாழ்த்து


செளந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணம் நடந்தேறியது-பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. அவருக்கும் பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

மணமகள் சவுந்தர்யாவும், மணமகன் அஸ்வினும் மாலை 6-30 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வந்தார்கள். சவுந்தர்யா பச்சை நிறத்தில் பட்டுச்சேலை அணிந்திருந்தார். அஸ்வின், சந்தன நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இருவருக்கும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த பத்திரிகையை புரோகிதர்கள் படித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்த்-லதா ரஜினிகாந்த் தம்பதிகளும், ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதிகளும் நிச்சயதார்த்தத்துக்கான தட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடனும், வைஜெயந்தி மாலா, மோகன்பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

இன்று காலை திருமணம்:

இன்று காலை ஏழரை மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் செளந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார்.

விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, இன்று மாலை 6-30 மணிக்கு நடைபெறுகிறது.

நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோரும் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை ஆசிர்வதித்தனர்.

No comments:

Post a Comment

 
New Adsensecamp